கோஹ்லியிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய வீரர் கேலி செய்த அஸ்வின்





இந்தியா - ஆஸ்திரேலிய  இடையேயான டெஸ்ட் போட்டியின் போது விராட் கோஹ்லிக்கு ஏற்பட்ட காயம் குறித்த விமர்சித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.  இந்த மன்னிப்பை இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கேலி செய்துள்ளார்.  எதிர்வரும் ஐபிஎல் காரணமாக தான் விராட் கடைசி டெஸ்டில் விளையாடவில்லை, காயம் காரணமாக அல்ல என விமர்சித்த ஹாட்ஜ், தனது கருத்திற்கு இந்திய மக்கள், ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் குறிப்பாக விராட் கோஹ்லியிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார் ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹாட்ஜ் இணைய உள்ளது குறிப்படத்தக்கது.  இதையடுத்து ஹாட்ஜின் மன்னிப்பு குறித்து அஸ்வின் டுவிட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.  அதில் நகைச்சுவையாக சொல்ல வேண்டுமென்றால், இந்த வருடம் முதல் மார்ச் 30ம் தேதி  உலக மன்னிப்பு தினம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url