பிரெண்டன் மெக்கல்லம் தேர்ந்தெடுத்த சிறந்த அணியில் ஒரே இந்திய வீரர்







நியூஸிலாந்தின் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் அனைத்து காலத்திலும் சிறந்த கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்துள்ளார், அதில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.  இவரது இந்த அணியில் 4 ஆஸ்திரேலியர்கள், 3 மேற்கிந்திய தீவு வீரர்கள், ஒரு தென் ஆப்பிரிக்க வீரர் மற்றும் 2 நியூஸிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.  மெக்கல்லம் அணியில் கிறிஸ் கெயில், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தொடக்க வீரர்கள். 3-ம் நிலையில் ரிக்கி பாண்டிங், பிறகு பிரையன் லாரா, அதற்கு அடுத்தபடியாக கேப்டன் விவ் ரிச்சர்ட்ஸ். பிறகு ஜாக் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட்.

மெக்கல்லம்மின் அனைத்து கால சிறந்த அணி வருமாறு:

கிறிஸ் கெயில், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ் (கேப்டன்), ஜாக் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட், மிட்செல் ஜான்சன், ஷேன் வார்ன், டிம் சவுதி, டிரெண்ட் போல்ட்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url