மணிரத்னத்தின் ‘தளபதி-2’ படத்தில் விஜய்-விக்ரம்





மணிரத்னம் இயக்கிய படங்களில் ரஜினி- மம்முட்டி நண்பர்களாக நடித்த ‘தளபதி’ பேசப்படும் படமாக அமைந்தது. இந்த படத்தின் 2-ம் பாகத்தை இயக்க மணிரத்னம் தயாராகி வருகிறார்.  இந்த படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. ‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் ‘தளபதி-2’ படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.  ‘தளபதி’ யில் ரஜினி நாயகனாக நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறார். மம்முட்டி நடித்த நண்பர் பாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். நண்பர்கள் கதை என்பதால் இவர்கள் இருவரிடமும் ‘தளபதி-2’ கதையை சொல்லி மணிரத்னம் ஒப்புதல் பெற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.  இதுபற்றிய அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url