Type Here to Get Search Results !

பிரதமர் மோடியின் இதுவரையான பயண செலவு எத்தனை கோடி தெரியுமா






நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று இதுநாள் வரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட 30 நாடுகளில் 8 நாடுகளுக்கான பயண செலவு மட்டும் ரூ.119.70 கோடி என தெரிய வந்துள்ளது.  பிரதமர் மோடி தன்னுடைய 8 வெளிநாட்டு பயணத்திற்கு செலவழித்த 119.70 கோடி ரூபாயை பிரதமர் அலுவலகம் இந்திய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.  பிரதமராக பதவியேற்ற பிறகு இந்த இரண்டரை வருடத்தில் மோடி இதுவரை 30 நாடுகளுக்கு 24 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ஏர் இந்தியா விமானத்தின் சிறப்பு விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது.  பிரதமரின் பயண செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முன்னாள் கடற்படை வீரர் லோகேஷ் பத்ரா கேட்டு இருந்தார். அதில் மொத்தம் 30 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்றும், அதில் 8 நாடுகளுக்கு பயணம் செய்த செலவு தொகை ரூ.119.70 கோடி நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.  இதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் அலுவகம் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்தவேண்டும் என்று தலைமை தகவல் ஆணையத்தில் லோகேஷ் பத்ரா முறையிட்டார்.  இதனையடுத்து மனு குறித்து விசாரித்த தலைமை தகவல் ஆணையர் பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். மக்கள் வரிப்பணத்துடன் தொடர்புடைய பிரதமரின் பயணச்செலவை உடனடியாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ரூ.119.70 கோடி ரூபாய் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுவிட்டதாக பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad