Type Here to Get Search Results !

ஆஸ்திரேலிய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை




சுழற்பந்து வீச்சில் விளையாடு வதற்கு விரைவில் கற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் இந்திய சுற்றுப்பயணத்தை தவிர்த்து விடுங்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அறிவுரை கூறியுள்ளார்.  ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி புனேவில் தொடங்குகிறது.  இந்நிலையில் கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இணையளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப் பதாவது:  சுழற்பந்து வீச்சில் விளையாட விரைவாக கற்றுக்கொள்ளுங்கள். உங்களால் சுழற்பந்து வீச்சில் விளையாட முடியாவிட்டால், இந்தியா செல்ல வேண்டாம். நீங்கள் இந்தியா சென்ற பிறகு அங்கு பயிற்சியில் ஈடுபடுவீர்கள். இது வழக்கமான நடைமுறைதான். ஆனால் அதனை நீங்கள் ஆஸ்தி ரேலியாவிலேயே செய்யலாம்.  சுழற்பந்து வீச்சில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து என்னால் ஆஸ்திரேலியா விலேயே பயிற்சி அளிக்க முடியும். சுழற்பந்து வீச்சில் முறையாக விளையாடுவதற்கு சுழல் ஆடுகளம் தான் தேவை என்பதும் அதில்தான் பயிற்சி பெற வேண்டும் என்பது இல்லை. நீங்கள் எந்த வகையிலான ஆடுகளத்திலும் விளையாடலாம். அனைத்துமே கால் நகர்வுகளை எப்படி மேற்கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் உள்ளது.  காலை முன்னால் கொண்டு சென்று ஒருபோதும் பேட் செய்யக் கூடாது. பந்துக்காக காத்திருந்து பேட் செய்ய வேண்டும். எந்த இடத்தில் பந்து பிட்ச் ஆகிறது என்பதை கவனித்து விளையாட வேண்டும். 150 கி.மீ. வேகத்தில் வீசப்படும் பந்தில் சிறப்பாக விளையாடும் உங்களால், 50 மைல்கள் வேகத்தில் வீசப்படும் பந்து வீச்சுக்கு எதிராக சிறந்த திறனை வெளிப்படுத்தி நல்ல நிலையை அடைய முடியும்.  இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad