Type Here to Get Search Results !

ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளிய நியூசிலாந்து




நியூசிலாந்து-ஆஸ்திரேலிய  அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றிப்பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.  Hamilton மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று  நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது .  அதன் படி களமிறங்கி விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள்  எடுத்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர் டெய்லர் சதம் அடித்து அணியின்   உறுதுணையாக இருந்தார்.  ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், பில்க்னெர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  282 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 257 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.  ஆஸ்திரேலிய தரப்பில் ஆரோன் பிஞ்ச் 56 ரன்கள்  எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆட்ட நாயகனாக போல்ட் தேர்வு  செய்யப்பட்டார்.  இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad