Type Here to Get Search Results !

மனம் திறக்கும் யுவராஜ் சிங்




இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக் கில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் அபார மாக விளையாடி 150 ரன்கள் விளாசினார். சுமார் 6 வருடங் களுக்கு பின்னர் அவர் சதம் அடித்தது அனைவரையும் வியக்க வைத்தது.  யுவராஜ் சிங்குடன் விளை யாடிய மூத்த வீரர்கள் பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். மேலும் புற்று நோயில் இருந்து மீண்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் திறம்பட செயல்பட்டு கடுமையான போராட்டத்துக்கு பிறகு அணியில் இடம் பிடித்த யுவராஜ் சிங் தனது திறமையை நிரூபித்துள்ளார்.  கட்டாக் போட்டியில் அவர் விளையாடிய விதம் பழைய யுவராஜ் சிங்கை நினைவுப் படுத்தும்விதமாகவே இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  விராட் கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். மற்ற வீரர்களிடமும் இந்த நம்பிக்கையை காணமுடிந்தது. இது எனக்கு முக்கியமானதாக அமைந்தது. கிரிக்கெட் பயணத்தை தொடரவா, வேண்டாமா என சிந்திக்கும் காலமும் உருவானது. இந்த பயணத் தில் எனக்கு ஏராளமானோர் உதவினர். ஒருபோதும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற கோட் பாடுடன் கடினமாக உழைத்தேன். காலம் அனைத்தையும் மாற்றும் என புரிந்துகொண்டேன். 6 வருடங்களுக்கு பிறகு சதம் அடித்தது சிறப்பான அம்சம்தான்.  புற்று நோயில் இருந்து குண மடைந்து அணிக்கு திரும்பியதும் 3 ஆண்டுகள் கடினமாக இருந்தது. உடல் பயிற்சிக்காக கடினமாகவும் உழைக்க வேண்டியது இருந்தது. மேலும் அணியில் இடம் பெறு வதும் நீக்கப்படுவதுமான நிலை இருந்தது. நிரந்தர இடத்தை பெறுவதற்கான நம்பகமான வீரராகவும் இல்லாமல் இருந்தேன்.  உள்ளூர் போட்டிகளில் எனது பேட்டிங் மீது அதிக கவனம் செலுத் தினேன். இதனால் பந்துகளை விரட்டி அடிக்கவும் முடிந்தது. செய்தித் தாள், தொலைக்காட்சி ஆகியவற்றை பார்க்காமல் முழுமையாக எனது ஆட்டத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தி எனது திறமையை நிரூபிக்க முயற்சி செய்தேன்.  எனக்கான நேரம் வரும் வரை காத்திருந்தேன். சர்வதேச அளவி லான போட்டிகளில் விளையாடு வதற்கு இன்னும் தகுதியுடனே உள்ளேன். தற்போது என்னுடைய இலக்கு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான். 150 ரன்கள் என்பது ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரியதுதான்.  எனது அதிகபட்ச ரன்குவிப்பான இது, நீண்ட நாட்களுக்கு பிறகு அமைந்துள்ளது. எனினும் மகிழ்ச்சியாகவே உள்ளது. வரும் காலங்களிலும் எனது பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.  தோனியும், நானும் இந்திய அணிக்காக பல்வேறு ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். அதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இது ரன் சேர்க்க உதவியாக இருந்தது. வருங் காலத்திலும் இது கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad