Type Here to Get Search Results !

பழனியாண்டவரின் சிலை கொடிய விஷங்களினால் ஆனதா





பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்திய நவபாஷாணங்கள்.  வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஜித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள்.  இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.  போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது.  இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.  அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரச கற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது!  ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை.  அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad