Type Here to Get Search Results !

வானத்தை நோக்கி பாய்ந்த கடல் நீர்....பூமிக்கு ஆபத்தா





அல்ஜீரியா நாட்டுக்கு அருகில் மத்திய தரைக்கடலில் நடந்துள்ள ஒரு அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜீரியா நாட்டில் உள்ள ஒரு கடலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதில், கடலில் இருக்கும் தண்ணீரானது திடீரென வானத்தை நோக்கி ராக்கெட் போல பாய்கிறது.  மேலும், கடலில் இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அதன் அருகில் பறக்கும் தட்டு போன்ற பொருள் ஒன்றும் தென்படுவதும் வீடியோவில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ செல்போன் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஞ்ஞான ஆய்வாளர் Tyler Glockner கூறுகையில், இது போன்ற நிகழ்வு இயற்கையானது தான். இது வழக்கமாக அடிக்கடி தோன்றக்கூடியது தான். மேலும், இந்த நீர்தாரையானது தண்ணீரீன் மேல் மட்டத்தில் தான் உருவாகும்.  இதற்கு பல விஷயங்கள்  காரணமாக அமையலாம். கடுமையான இடியுடன் கூடிய புயல் காற்று, பலத்த சத்தத்துடன் ஏற்படுகின்ற மின்னல் போன்றவைகளால் இது ஏற்ப்படுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும் நீர்தாரை வானத்தை நோக்கி போய் கொண்டிருக்கும் போது மேகத்தின் அருகில் இருப்பது UFO எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆய்வுகள் விஞ்ஞானிகளால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது எனவும் Tyler கூறியுள்ளார்.  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad