அட கொய்யா இலைக்கு இவ்ளோ மகிமையா
பழம் என்பது அனைவரையும் இழுத்து சாப்பிட வைக்கும். சில பழங்களின் இலைகளுக்கு கூட சுவை அதிகம், அதுவும் கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என எல்லாத்திலும் மருத்துவ தன்மை உண்டு. மகிமைகள்:கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி காணப்படும். நோயை குணப்படுத்தும் கொய்யா இலைகள்:வயிற்று போக்கினால் அவதிப்படும் போது 30கிராம் கொய்யா இலையுடன் ஒரு கையளவு அரிசி மாவும் 2 டம்ளர் தண்ணீரும் சேர்த்து தினமும் இரு வேலை சாப்பிட வயிற்று போக்கு சரியாகிவிடும் உடல் எடையை குறைக்க கொய்யா இலை சாறு சாப்பிட்டால் போதும். வாயில் பல் வலி, வாய்ப்புண், தொண்டைப் புண், ஈறுகளில் பிரச்சனைக்கு இலையை டீயில் போட்டு சாப்பிட்டால் பிரச்சனை சால்வ். மேலும் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பக்டீரியாக்களை அழித்து, செரிமானம் நடைபெறும். கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு பயன்படுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது. கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், உதிரப்போக்கு தடைபடும், மேலும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும். இனி கொய்யா பயன்படுத்தாம இருக்காதிங்க