அஜித்தால் சூட்டிங்ஸ்பாட்டில் மாறிய பிரபல நடிகையின் மரியாதை
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றழைக்கப்படுபவர் அஜித். இவர் தற்போது தல57 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் நடிக்கிறார். இவர் அஜித்தை பற்றி கூறும் போது, அஜித்தை புகழாமல் இருக்க முடியவில்லை. அவர் என்னை காஜல்ஜி என்றழைத்தார். உங்களை விட நான் இளையவள் என்று கூறினேன். அதற்கு உங்களை தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் காஜல் என்றழைக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் காஜல்ஜி என்று தான் அழைப்பேன். அப்போது தான் மற்றவர்களும் உங்களிடம் அதே மரியாதையுடன் நடப்பார்கள் என்று கூறினார். அதே போலவே அனைவருமே காஜல்ஜி என்று மரியாதையோடு தான் அழைத்தார்கள் என்று கூறினார்.