Type Here to Get Search Results !

சாதனை படைத்தது நியூஸிலாந்து அணி




பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக 2-0 என கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு எதிராக 31 வருடங்களுக்கு பிறகு நியூஸிலாந்து அணி தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.  ஹாமில்டனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் 369 ரன்கள் இலக்குடன் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஷமி அஸ்லாம்-பாபர் அலி ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தனர். அசார் அலி 58 ரன்களில் ஆட்டமிழக்க தேநீர் இடைவேளையில் பாகிஸ்தான் 67 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அப்போது பாகிஸ்தான் வசம் 9 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு 204 பந்துகளில் 211 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.  ஆனால் கடைசி செஷனில் பாகிஸ்தான் அணி 72 ரன்களை சேர்ப்பதற்குள் 9 விக்கெட்களை பறிகொடுத்தது. ஷமி அஸ்லாம் 91 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தா னுக்கு எதிராக நியூஸிலாந்து அணி கடைசியாக 1985-ல் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர் 31 வருடங்களுக்கு பிறகு தற்போது டெஸ்ட் தொடரை கைப் பற்றி சாதனை படைத்துள்ளது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad