சகோதரனை இழந்த ஜெயவர்த்தனே: மேடையில் கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்






இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே சகோதரன் இறந்ததை தாங்கமுடியாமல் மேடையில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.  இலங்கையில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோய் தொடர்பான சிறப்பு மருத்துமனை அமைக்கவும் இலங்கை வீரர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலர் TRAIL WALK என்ற பெயரில் இலங்கையில் சுமார் 663 கி.மீற்றர் நடைபயணம் மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.  இதில் மிகவும் முக்கிய பங்காக விளங்குபவர் இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே. இவர் அவ்வப்போது இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.  இந்நிலையில் புற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்கான அறக்கட்டளை சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயவர்த்தனே மேடையில் ஏறி புற்று நோய் தொடர்பாக பேசிய போது கண்கலங்கிய சம்பவம் அங்கிருந்த பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.  இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் என்றும் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றதாகவும், ஆனால் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url