Type Here to Get Search Results !

நூலிழையில் உயிர் தப்பிய பிரபல ஒலிம்பிக் வீராங்கனை





ஒலிம்பிக் போட்டிகளில் 3 முறை பதக்கம் வென்ற பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லிஸா ஸ்கின்னர் சர்க்கஸ் நிகழச்சி ஒன்றின்போது விபத்தில் சிக்கியுள்ள சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆஸ்திரேலியாவின்  பிரிஸ்பேன் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு நடைபெற்ற Cirque du Soleil எனும் சர்க்கஸ் நிகழ்சியின்போது அந்தரத்தில் கட்டிவிடப்பட்டிருந்த வளையத்தில் தாவிக் குதித்தபோது 5 மீற்றர் உயரத்தில் இருந்து பிடி தவறி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். குறித்த விபத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்பதால் அவர் சுதாரித்துக் கொண்டு விபத்தில் இருந்து தப்பியதாக குறப்படுகிறது. ஸ்கின்னர் தவறி விழுந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  35 வயதாகும் லிஸா ஸ்கின்னர் 1996, 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றவராவார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad