இங்கிலாந்தை சூறையாடிய வங்கதேச வீரருக்கு அடித்தது ஜாக்பாட்
உலக கிரிக்கெட் அரங்கில் வங்கதேச கிரிக்கெட் அணி புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பலம் வாய்ந்த அணிகளுக்கும் தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா சாதிக்கும் வீரர்களை ஊக்கப்படுத்தவும் தவறுவதில்லை. கடந்த ஆண்டு ஒருநாள் தொடரில் 3-0 என பாகிஸ்தான் அணியை ஒயிட்-வாஷ் செய்த வங்கதேச வீரர்களுக்கு பணப்பரிசு, கார் மற்றும் புதிய வீடு என பல பரிசுகளை அறிவித்தார் ஹசினா. இந்நிலையில் டாக்காவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்த உதவிய இளம் வீரர் மெஹடி ஹசன் மிர்ஸ்க்கு புதிய வீடு ஒன்றை கட்டுக் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் தலா 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய மெஹடி, 2 டெஸ்ட் போட்டியில் மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குபட்டோருக்கான தொடரிலும் வங்கதேச அணியில் இடம்பெற்ற அவர் ஆல்ரவுண்டர் ஆட்டத்தால் தொடர் ஆட்டநாயகன் விருதும் வென்றார்.