Type Here to Get Search Results !

இந்திய தொடர் இங்கிலாந்து அணி அறிவிப்பு ஆண்டர்சனுக்கு இடமில்லை



லண்டன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பெறவில்லை. இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 9ல் ராஜ்கோட் நகரில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் விசாகப்பட்டினம் (நவ. 17-21), சண்டிகர் (நவ. 26-30), மும்பை (டிச. 8-12), சென்னை (டிச. 16-20) நகரங்களில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 34, தேர்வு செய்யப்படவில்லை. ஏற்கனவே இவர், தோள்பட்டை காயம் காரணமாக பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வாகவில்லை. முன்னதாக ஆண்டர்சன், ராஜ்கோட் நகரில் நடக்கும் முதல் டெஸ்டில் மட்டும் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 16 பேர் கொண்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாதது, ஒட்டுமொத்த தொடரிலும் விளையாட மாட்டார் என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கும் ஆண்டர்சன் (463 விக்கெட்), கடந்த 2012 13ல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என தொடரை வெல்ல முக்கிய பங்குவகித்தார். தற்போது வங்கதேச மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடும் அதே அணி, இந்திய தொடருக்கும் தேர்வாகியுள்ளது.

இங்கிலாந்து அணி: 

அலெஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜாபர் அனசாரி, ஜானி பேர்ஸ்டோவ், ஜாக் பால், கேரி பேலன்ஸ், கரேத் பாட்டி, ஸ்டூவர்ட் பிராட், ஜாஸ் பட்லர், பென் டக்கெட், ஸ்டீவன் பின், ஹசீப் ஹமீத், அடில் ரசித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad