Type Here to Get Search Results !

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்து தொடரை வென்றதில் மகிழ்ச்சி: தோனி




நியூஸிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 3-2 என்று இந்திய அணி வென்றதையடுத்து வீர்ர்களின் ஆட்டத்தை கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.  நேற்று ஆட்டம் முடிந்த பிறகு தோனி கூறியதாவது:  மிஸ்ரா பந்துவீச்சின் அழகு என்னவெனில் அவர் மெதுவாக வீசுகிறார். அதனால்தான் விக்கெட் கீப்பரான என்னால் ஸ்டம்பிங் செய்ய முடிகிறது. அக்சர் படேல் ஒரு முனையில் விரைவாகவும் பிளாட்டாகவும் வீச மிஸ்ரா, படேல் இணை அருமையாக வீசினர். விராட் கோலி பேட்டிங்கில் அருமையாக ஆடினார். ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கண்டோம்.  ரோஹித் காயமடைந்த போது அவருக்கு தெரிவிக்கப்பட்டது என்னவெனில் நிற்க முடியவில்லையா பெரிய ஷாட்களை ஆடு என்றோம். அவர் ஆட்டமிழந்தாலும் எங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துவிட்டுச் சென்றார். ரன்களை ஒன்று இரண்டு எடுப்பதற்கான பிட்ச் அல்ல இது என்பதை உணர்ந்தோம்.
அதனால்தான் பெரிய ஷாட்களை ஆடினோம். 270 என்பது சவாலான ஸ்கோர். பனிப்பொழிவு இருப்பதால் இந்த ஸ்கோர் சரியான ஸ்கோரே. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது மகிழ்ச்சியே, ஆனாலும் அணி வீரர்களின் ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது, தொடரை வெல்ல இவர்களது பங்களிப்பு மிக முக்கியம். குறிப்பாக பின்னால் இறங்கும் கேதர் ஜாதவ், அக்சர் படேல், மணீஷ் பாண்டே ஆகியோர் நிறைய அனுபவம் பெற்றனர்.
நிறைய ஆட ஆடத்தான் சர்வதேச கிரிக்கெட்டில் இவர்கள் ஒரு குறிப்பிடத்தகுந்த வீர்ர்களாக உருவெடுக்க முடியும், எனவே வாய்ப்புகள் வழங்குவது அவசியம். ஆட்டத்திற்கு சில அணுகுமுறைகள் உள்ளன. ஐபிஎல் வழி அது அடித்துக் கொண்டே இருப்பது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் நாம் தோல்வியடையும் போது நாம் நிதானித்து ஆட எத்தனிக்கிறோம். 40 ஒவர்களில் வெற்றி பெற வேண்டும் என்றில்லை, 50 ஒவர்களிலும் வெல்லலாம்.  இவ்வாறு கூறினார் தோனி.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad