Type Here to Get Search Results !

ரிக்கி பாண்டிங் முதல் எதிரி யார் தெரியுமா




ஆஸ்திரேலியாவின்  சிறந்த கிரிக்கெட்  வீரரும், முன்னாள் அணித்தலைவருமான ரிக்கி பாண்டிங்  அவரது சொந்த மாநிலமான டாஸ்மானியாவின் Brand Ambassador-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.  அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, நான் இந்தியாவிற்கு எதிராக ஆடும் பொழுது எனது முதல் எதிரியே ஹர்பஜன் சிங்.  அவரை இப்போது நினைத்தால் கூட எனக்கு உதறல் எடுக்கும். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் என்னை 10 முறை அவுட்டாக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.  மேலும் தற்போதுள்ள அனைத்து வீரர்களூம் சிறந்த முறையில் ஆடுவதாகவும், கும்ப்ளேயுடன் மும்பை இண்டியன்ஸ் அணியில் இணைந்திருந்தது பெருமையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  கோஹ்லி பற்றி கூறுகையில், திறமையான வீரர், அவருக்கு இன்னும் வயது உள்ளது. நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகம் அவருக்குள் இருக்கிறது என தெரிவித்துள்ளார்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad