டுவிட்டரில் ரசிகர்களை வெளுத்து வாங்கிய சித்தார்த்
டுவிட்டரில் பல பிரபலங்கள் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். இதில் மிகவும் ஆக்டிவாக தினமும் தன் கருத்துக்களை கூறி வருபவர் சித்தார்த். இவர் நேற்று மிகவும் கோபமாக ’தியேட்டரில் படத்தை மட்டும் பாருங்கள், மொபைலையும் ஆப்ரேட் செய்து எப்படி உங்களால் படமும் பார்க்க முடிகின்றது. ஒரு படம் நன்றாக இருக்கின்றதா? இல்லையா? என்பதை மட்டும் கூறுங்கள், படத்தை பார்க்காதீர்கள் என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை’ என்று கோபமாக டுவிட் செய்துள்ளார்.