Type Here to Get Search Results !

மனம் திறந்த பிரபல டென்னிஸ் வீரர்




டென்னிஸ் உலகில் கொடிகட்டி பறந்த ஜேர்மனியின் முன்னால் டென்னிஸ் வீரர் Boris Becker தனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தினை தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.  Boris Becker- ரின் நீல நிற கண்கள், காவி நிற தலைமுடி ஆகிய இரண்டுமே பெண்கள் இவர் பின்னால் துள்ளிக்குதித்து ரசிகைகளாக ஓடிவர ஒரு காரணமாக இருந்தது.  பெண்கள் சுற்றும் பேரழகனாய் இருந்த இவர், ஒரு பெண்ணால் தனது வாழ்வின் நிம்மதி மற்றும் சுயமரியாதையை இழந்தது குறித்து மனவருத்தத்தோடு கூறியுள்ளது உலகில் உள்ள ஒவ்வொரு ஆண்மகனுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.  தனது மனைவி Barbra - வுடன் சந்தோஷமாக வாழ்க்கையை கழித்து வந்த இவர், ஒரு நாள் லண்டனில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றிற்கு தனது மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு தனது மனைவியுடன் சேர்ந்து உணவருந்திய பின்னர், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக கோபத்தோடு அந்த ஹொட்டலை விட்டு வெளியேறிய இவர், லண்டனில் இருந்த மற்றொரு ஹொட்டலுக்குள் சென்றுள்ளார்.  அங்குதான் இவரது வாழ்வில் விதி விளையாடியுள்ளது. ரஷ்ய மொடலான Angela Ermakowa - ஐ அந்த ஹொட்டலில் வைத்து சந்தித்துள்ளார். இவர், Boris - யின் தீவிர ரசிகை ஆவார்.  Angela- வை இதற்கு முன்னர் பார்த்திராத Boris, அவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மது போதையில் சுயநினைவை இழந்த இவர், அங்குள்ள ஹொட்டல் அறையில் Angela - வுடன் ஒன்றாக இருந்துள்ளார். அன்றைய ஒரு நாள் இரவால், இவரது வாழ்நாளின் பல இரவுகள் நரகமானது.  இந்த தவறான உறவின் காரணமாக Angela- க்கு Anna என்ற குழந்தை பிறந்தது. இந்த விடயம் உலகத்துக்கு அம்பலமானதையடுத்து, Boris மற்றும் அவரது மனைவிக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், தனது உறவினர்கள் முன்னிலையில் தலைகுனிந்து நின்றுள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சொற்ப நேர ஆசைக்காக எனது சுயமரியாதையை இழந்துவிட்டேன், நான் சுயநினைவற்ற நிலையில் இருந்தபோதே இதுபோன்ற தவறில் ஈடுபட்டேன்.  அன்று எனது மனைவியோடு சண்டையிட்டுக்கொண்டு, ஹொட்டலை விட்டு வெளியேறிய நான், அந்த கோபத்தில் மற்றொரு பெண்ணை தேடிச்சென்றுள்ளேன். வெளியில் பசி எடுத்தாலும் வீட்டில் சென்று தாகம் தீர்க்க வேண்டும் என்பதை இதன் மூலம் அறிந்துகொண்டேன்.  அன்றைய ஒரு நாளுக்காக Angela க்கு £2million தொகை மற்றும் பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் £25,000 கொடுத்துள்ளேன்.  அந்த ஒரு இரவு எனது வாழ்க்கையை திருப்பிவிட்டது, அந்த சம்பவத்திற்கு பிறகு விம்பிள்டன் விளையாட்டு மற்றும் அதற்கு அடுத்ததாக நடந்த விளையாட்டுகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்தேன்.  மேலும், எனது மனைவியை பிரிந்ததோடு மட்டுமல்லாமல் அவளுக்கும் பலமில்லியன் தொகையை ஜீவனாம்சமாக கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.  தற்போது, கார் தொழில் மற்றும் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்து வரும் நான் சுதந்திரப்பறவையாக இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எனது குழந்தைகளை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.  1999 ஆம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து Boris ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad