Type Here to Get Search Results !

சாதனை படைக்கும் சல்மான் கானின் சுல்தான்





பாலிவுட் நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்’ முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி ரூபாயை வசூலித்தது.  ரிலீசான மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்த இந்தப்படம் ஷாருக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்’, ‘ஃபேன்’ மற்றும் சல்மான் கானின் ‘பிரேம் ரடன் தன் பாயோ’ ஆகிய படங்களின் முந்தைய வசூல் சாதனையை முறியடித்தது.  இந்நிலையில், நான்காம் நாளான கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரேநாளில் சுமார் 36 கோடி ரூபாயை ‘சுல்தான்’ அள்ளியுள்ளது. நான்கு நாட்களில் 142 கோடியே 62 லட்சம் ரூபாயை சம்பாதித்ததன்மூலம், ‘ஹவுஸ் புல்’ (ரூ.107 கோடி), ‘ஏர்லிப்ட்’ (ரூ.127 கோடி) ஆகிய இந்த ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனைகளை ‘சுல்தான்’ முறியடித்துள்ளது.  மேலும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் 180 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டும் ‘சுல்தான்’, மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad