Type Here to Get Search Results !

வரிசையாக திரைக்கு வரும் நயன்தாராவின் படங்கள்




தமிழில் முதல் இடத்தை பிடித்திருக்கும் நயன்தாரா படங்களுக்கு தனி மவுசு இருக்கிறது. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோக்களுக்கு இணையான வேடங்களில் நடிக்கும் நயன்தாரா சம்பளம் ரூ. 4 கோடி என்று தகவல் வெளியாகி இருக்கிறது.  என்றாலும், நயன்தாரா தங்கள் படத்தில் நடித்தால் அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே அதிகரித்து வருகிறது.  சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. வெற்றிப்படங்களாகவும் அமைந்தன. இதனால் நயன்தாரா தெலுங்கு, மலையாளத்தில் நடித்த படங்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.  இப்போதிலிருந்து ஆகஸ்டு 12–ந்தேதிக்குள் நயன்தாராவின் 4 படங்கள் திரைக்கு வருகின்றன.  தெலுங்கில் ரவிதேஜாவுடன் நயன்தாரா நடித்துள்ள “துபாய் ராணி”, “அதிரடி அர்ஜுன்” படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இன்று திரைக்கு வந்துள்ளன. ஆகஸ்டு 5–ல் ஜீவாவுடன் நயன்தாரா நடித்த “திருநாள்” ரிலீஸ் ஆகிறது.  ஆகஸ்டு 12–ந்தேதி வெங்கடேசுடன் நயன்தாரா நடித்த “பாபு பங்காராம்” தெலுங்கு படம் “செல்வி” என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. நயன்தாராவை முன் நிறுத்தியே இந்த படங்கள் திரைக்கு வருகின்றன என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad