Type Here to Get Search Results !

அப்பா பட விமர்சனம்




பொதுவாக சமுத்திரக்கனியின் படங்கள் என்றாலே சற்று எதிர்பார்ப்பும், உணர்ச்சி பூர்வமான வசனங்களும் இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறார் சமுத்திரக்கனி.தன்னுடைய மகனிற்கு படிப்பு மட்டும் முன்னேற்றமல்ல இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் ஒரு நல்ல அப்பாவாக சமுத்திரக்கனி வருகிறார்.தம்பி ராமையா சாட்டை படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் இந்த படத்திலும் ஒரு சுயநலமான மனிதராக நடித்திருக்கிறார். இந்த உலகம் சுயநலமிக்கது இதில் நீயும் சுயநலமாகத்தான் இருக்க வேண்டும் என்று தன் மகனிற்கு சொல்லிக் கொடுக்கும் போதும் ரசிக்க வைக்கிறார்.என்ன நடந்தால் என்ன நாம இருக்கிற இடம் தெரியக்கூடாது என்று தன்னுடைய பிள்ளையை வளர்க்கும் ஒரு அப்பாவி அப்பாவாக வரும் நமோ நாராயணன்மேலும் சமுத்திரகனியின் மகனாக நடித்திருக்கும் காக்கா முட்டை விக்னேஷ். இந்த படத்திலும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய சந்தேகங்களை கேட்கும் போதும் அதை சமுத்திரகனி அவருக்கு புரிய வைக்கும் இடத்திலும் ஒரு நல்ல அப்பா மகன் உறவு திரையில் தெரிகிறது.தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் ராகவ் ஒரு பயந்த சுபாவம் கொண்டவராகவும், தன்னுடைய அப்பாவின் புல்லெட் சத்தத்தை கேட்டு பயந்து ஓடும் போதும் ரசிக்க வைக்கின்றார்.இதை தவிர நமோ நாராயனணின் மகனாக வரும் நாசத் மற்றும் யுவலக்ஷ்மி, கேப்ரியல்லா, திலிப்பன், வினோதினி அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்துக்கு பொருந்தி நடித்துள்ளனர்.படத்தின் காட்சியமைப்புகளுக்கு தனியாக எழுந்து நின்று பாராட்ட வேண்டும், அதிலும் சமுத்திரக்கனி தன் மகன் ஒரு பெண்ணின் மீது ஆசைக்கொண்டாலும், இந்த வயதில் இதை எப்படி அணுக வேண்டும் என்று விவரிக்கும் இடம், நமக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே என ஏங்க வைக்கும் காட்சிகள்.இளையராஜாவின் இசை எப்போதும் இதுப்போன்ற படங்களுக்கு உயிராக இருக்கும், நம்மையும் அதோடு பயணிக்க வைக்கும், இதில் கொஞ்சம் பயணம் பாதியிலேயே நின்ற அனுபவம்.ரிச்சர்டு M நாதனின் ஒளிப்பதிவும் படத்தின் பட்ஜெட் காரணமா? அல்லது மிகவும் யதார்த்தமாக எடுக்கவேண்டும் என்ற நோக்கமா? என்று தெரியவில்லை. கொஞ்சம் மங்கியே காணப்படுகின்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad