Type Here to Get Search Results !

யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்




யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் அணி நேற்று நள்ளிரவு துருக்கியை எதிர்கொண்டது. வலுவான ஸ்பெயின் அணியை எதிர்கொள்வதில் ஆரம்பத்தில் இருந்தே துருக்கி தடுமாறியது. ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் அல்வாரா மொராட்டா தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 34வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். நோலியோ அடித்து கொடுத்த பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார் மொராட்டா. இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது. அடுத்த 3 நிமிடத்தில்  அகுடோ நோலியோ மேலும் ஒரு கோல் அடித்தார். 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது.  இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் துருக்கி திணறியது. இந்தமுறை மொராட்டா ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில்(48வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் 3 முறை கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த போதும் ஸ்பெயின் வீரர்கள் நழுவ விட்டனர். கடைசி வரை துருக்கியால் பதிலுக்கு கோல் ஏதும் போட முடியவில்லை. இப்போட்டியில் வென்றது மூலம் தனது குரூப் டி பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நாக்அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad