Type Here to Get Search Results !

கபாலியில் வயதான வேடத்தில் ரஜினி 20 நிமிடங்களே தோன்றுவார்


ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் மலேசியாவுக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் கபாலீஸ்வரன். மலேசியாவில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவராகவும் டானாகவும் ரஜினி நடித்துள்ளார். கபாலி என்றால் கெட்ட மனிதர்களின் பெயராக இருந்துவந்ததை இந்தப் படத்தில் மாற்றியுள்ளேன். 2 கெட்-அப்களில் ரஜினி தோன்றுவார். அவருடைய இளமையான தோற்றத்துக்காக 1978-ல் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் அவர் தோன்றியதை வைத்து வடிவமைத்தேன்.  ரஜினியின் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றம் மிகவும் புகழ்பெற்றுவிட்டது.  வயதான கதாபாத்திரத்தில் அவர் 20 நிமிடங்களே தோன்றுவார். மற்றபடி அவர் இளமையான தோற்றத்தில் தான் படத்தில் வருவார். கபாலி படத்தில் ஆக்‌ஷன் மட்டும் இருக்காது. உணர்வுபூர்வமான காட்சிகளும் உண்டு. மக்களால் அவற்றுடன் தங்களை இணைத்துக்கொள்ளமுடியும்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad