Type Here to Get Search Results !

வெற்றியை வருங்கால மனைவியுடன் கொண்டாடிய யுவராஜ் சிங்




ஐபிஎல் 9வது தொடரில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது.  பெங்களூரில் நடந்த இறுதிப் போட்டியில் ராயல்  சேலர்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 ரன்களால் வீழ்த்திய ஐதராபாத் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.  இந்நிலையில் ஐதராபாத் அணி வீரர்கள் பஸ்ஸில் போகும் போது வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது யுவராஜ் சிங்கும் தனது அணி கிண்ணம் வென்றதை உற்சாகத்துடன் கொண்டாடினார். யுவராஜின் அருகில் அவரது வருங்கால மனைவியான ஹாசல் கீச்சும் இருந்தார்.  இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் 23 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad