Type Here to Get Search Results !

ஜாக்சன் துரைக்காக கடவுளை வேண்டும் பிந்துமாதவி





வெப்பம் படத்தில் தமிழுக்கு வந்த தெலுங்கு நடிகை பிந்துமாதவி கழுகு படத்தில் பிரபலமானார். அதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிந்துமாதவியின் மார்க்கெட் திடீரென்று டல்லடித்து விட்டது. அதனால் பசங்க-2 உள்பட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்த அவர், தற்போது சிபிராஜ் நடித்துள்ள ஜாக்சன்துரை படத்தில் நாயகியாக நடித்தள்ளார். இதன்பிறகு அவருக்கு புதிதாக படங்களில்லை. மேலும், நாய்கள் ஜாக்கிரதை ஹிட்டுக்குப்பிறகு சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிந்துமாதவிக்கும் வெயிட்டான வேடமாம். அதனால் ஜூன் 17-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அவர். அதோடு, அவர் சான்ஸ் கேட்ட சில டைரக்டர்களும் ஜாக்சன்துரை படத்தின் ரிசல்ட் நன்றாக இருந்தால் பிந்துமாதவிக்கு புதிய படவாய்ப்பு தருவதாகவும் கூறியிருக்கிறார்களாம். அதனால் இந்த படம் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டிருக்கிறாராம் பிந்துமாதவி



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad