Type Here to Get Search Results !

உச்சகட்ட மோதலில் ஈடுபட்ட வீரர்கள்

உலகில் பல விளையாட்டுப் போட்டிகள் இருந்தாலும் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் “ஜெண்டில் மேன்”விளையாட்டாகவே கருதப்படுகிறது.  வெற்றி, தோல்வியின்போதும் இரு அணி வீரர்களிடையே சகோதரத்துவ தன்மையே காணப்படும். ஆனால் சில சமயங்களில் இந்த விஷயம் தலைகீழாக மாறிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.  எதிரணி வீரர்களிடையே சிறு சிறு மோதல் காணப்படுவது வழக்கமான விடயம் என்றாலும், சொந்த நாட்டு வீரர்களே மூர்க்கத்தனமாகவும் மோதிக் கொண்டுள்ளனர்.  அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள வீரர்களை பற்றி பார்க்கலாம்.

விராட் கோஹ்லி - கவுதம் கம்பீர் (இந்தியா)




கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் கோஹ்லி அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறும் போது, கம்பீர், கோஹ்லியுடன் வாய்மொழி மோதலில் ஈடுபட்டார். கைகலப்பு வரை சென்ற இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சைக்குள்ளானது.


மேத்யூ ஹேடன் - கிளென் மெக்ராத் (அவுஸ்திரேலியா)




1994 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா “ஏ” அணியும், Australian first XI அணியும் மோதிக்கொண்ட போட்டியின் போது, கிளென் மெக்ராத் வீசிய பந்தை ஹேடன் விளாசிய பின்னர், மெக்ராத், ஹேடனிடம் மோதலில் ஈடுப்பட்டார்.

முகமது ஆசிப் - சோயிப் அக்தர் (பாகிஸ்தான்)




2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ணத்திற்கு முன்னதாக, உடை மாற்றும் அறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து சோயிப் அக்தர், பேட்டிங்  மட்டையை கொண்டு ஆசிப்பின் இடது தொடையில் அடித்தார். பின் அக்தர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு மூன்று போட்டிகளில் விளையாட தடைசெய்யப்பட்டார்.

டக் பிரேஸ்வெல்- ஜெஸ்ஸி ரைடர் (நியூசிலாந்து)




2014 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கு பின்னர், டக் பிரேஸ்வெல், ஜெஸ்ஸி ரைடர் இருவரும் பொது விடுதியில் மதுகுடித்துவிட்டு மோதலில் ஈடுபட்டனர், இதில் டக் பிரேஸ் வெல்லுக்கு பாதத்திலும், ரைடருக்கு கையிலும் பலத்த காயம் எற்பட்டது.

ஹர்பஜன் சிங் - ஸ்ரீசாந்த் (இந்தியா)




2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது, கிங்ஸ் லெவன் வீரர் ஸ்ரீசாந்த்தை, மும்பை அணி வீரர் ஹர்பஜன் மைதானத்திலே வைத்து ஓங்கி அறைந்தார்.இதைதொடர்ந்து மீதம் இருந்த போட்டிகளில் விளையாட ஹர்பஜனுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகமது ஷாஷட் – வஹாப் ரியாஸ் (பாகிஸ்தான்)




2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் போது ரியாஸ் வீசிய பந்தை ஷாஷட் சிக்சர் அடிக்க, அடுத்த பந்தில் ஷாஷட் போல்டு ஆகி வெளியேறினார். அப்போது வாய்மொழி மோலில் ஈடுபட்ட ரியாஸ், ஷாஷட்டை தள்ளிவிட்டார். இதை தொடர்ந்து போட்டி நடுவர் இருவரையும் சமாதானம் செய்தார்.

ரவீந்திர ஜடேஜா - ரெய்னா (இந்தியா)




2013-14 ஆம் ஆண்டில் நடந்த முத்தரப்புத் தொடரில் இந்திய - மேற்கிந்திய தீவுகள் மோதின. இந்த நிலையில் ஆட்டத்தின் போது அணித்தலைவர் ரெய்னா இரண்டுபந்துகளை பிடிக்க தவறினார். அப்போது ஜடேஜா அவரிடம் வாய்மொழி மோதலில் ஈடுபட இருவருக்கும் இடையே மோதல் எற்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad