Type Here to Get Search Results !

சர்வதேச நாய் கடத்தல் பற்றி ஒரு சினிமா



ஆள் கடத்தல் போன்று சமூக விரோத கும்பல் ஒன்று நாய் கடத்தல் செய்கிறதாம். அதிக மதிப்புள்ள உயர் வகை நாய்களை நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் கடத்தி விற்பதுதான் இந்த கும்பலின் செயல்பாடாம். இதனை மையமாக கொண்டு உருவாகி வருகிறது ஜூலியும் நாலு பேரும். ஆர்.பி சதீஷ் என்ற புதுமுகம் இயக்குகிறார். ரீச் மீடியாக சொல்யூஷன் என்ற நிறுவனமும், சஹானா ஸ்டூடியோவும் இணைந்து தயாரிக்கிறது. அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட பீகிள் வகையைச் சேர்ந்த ஜூலி என்ற நாய்தான் படத்தின் ஹீரோ. இதுதவிர விஜய் டி.வி தொகுப்பாளர்கள் அமுதவாணன், ஜார்ஜ் முக்கிய கேரடக்ரில் நடிக்கிறார்கள். கே.ஏ பாஸ்கர் ஒளிப்பதிவு செய்கிறார். ரகு ஸ்ரவன் இசை அமைக்கிறார். தமிழ் சினிமாவில் நாயை மையமாக கொண்டு ஒரே நேரத்தில் 3 படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad