Type Here to Get Search Results !

கோஹ்லியா யார் அவர்? வம்பு செய்த ஆஸ்திரேலிய வீரர்



கோஹ்லியா யார் அது என கேட்ட ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பாவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். கடந்த 2014ல் சச்சினை தெரியாது என்று கூறி சர்ச்சை கிளப்பினார் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா. இப்போது, இந்திய அணியின் நட்சத்திர வீரரான கோஹ்லியை தெரியாது எனஆஸ்திரேலிய இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா கூறியுள்ளார். இத்தனைக்கும், பிரிமியர் தொடரில் புனே அணிக்காக பங்கேற்க இந்தியாவில் தான் உள்ளார் ஜாம்பா. இத்தொடரில் பெங்களூரு அணிக்காக கேப்டன் கோஹ்லி, அதிரடி வீரர் டிவிலியர்ஸ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். இதே அணியில் உள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கனே ரிச்சர்ட்சன்,

தனது டுவிட்டர்  செய்தியில்  கோஹ்லி, டிவிலியர்ஸ் படத்தை வெளியிட்டு, இந்த இரு வீரர்களின் ஆட்டத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையில் நான் அதிர்ஷ்டக்காரன் தான்  என, தெரிவித்தார்.

 இதைப் பார்த்த ஆடம் ஜாம்பா, தனது டுவிட்டரில்  கோஹ்லி, டிவிலியர்சா, அவர்கள் யாரு என, கேட்டார். இதற்கு ரிச்சர்ட்சன் அனுப்பிய பதிலில்,  உங்கள் புனே அணியில் உள்ள இஷாந்த் சர்மாவிடம் கேளு,  என, தெரிவித்தார்.

 ஜாம்பாவின் இச்செயலுக்கு கோஹ்லி ரசிகர்கள்,  டுவிட்டரில் விளாசி வருகின்றனர்.  ஷகுன் என்ற ரசிகர்,  இந்தக் கேள்வியை ரிச்சர்ட்சனிடம் கேட்டிருக்கக் கூடாது, உங்கள் வீரர் பால்க்னரிடம் கேள்,

கோஹ்லி குறித்து அவர் சிறப்பாக சொல்வார் என்றார்.  மற்றொரு ரசிகரின் டுவிட்டர் செய்தியில் சிறப்பாக சொன்னீர்கள் ரிச்சர்ட்சன், கோஹ்லி, டிவிலியர்ஸ் குறித்து இஷாந்த் சரியாக சொல்லவில்லை என்றால் பிரண்டன் மெக்கலம் சொல்வார் என்றார்





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad