Type Here to Get Search Results !

சினிமா துறையில் தொடரும் தற்கொலைகள்



சினிமா என்பது கனவுலகம் என்று சொல்லப்படுவதுண்டு. உடனடியாக பிரபலம் ஆகிவிடலாம் என்று பலர் இந்த துறையை தேர்ந்தெடுக்கின்றனர்.நடிகர், நடிகைகள் வெளியில் பகட்டு வாழ்க்கை வாழ்பவர்கள் போல மக்களுக்கு தெரிந்தாலும் இவர்கள் தங்களுக்குள் பல சோகங்களை மறைத்து தான் வாழ்கின்றனர்.மக்களை மகிழ்விக்கும் இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.சிலர் பிரச்சனையை எதிர்த்து போராட துணிவில்லாமல் தற்கொலையை தேர்ந்தெடுக்கின்றனர். பாலுமகேந்திராவின் மனைவி நடிகை ஷோபாவில் தொடங்கி சில்க் ஸ்மிதா, மோனல், குணால், சீரியல் இயக்குனர் பாலாஜி யாதவ் மற்றும் சாய்பிரசாந்த் வரை பலர் இந்த கோரமான முடிவை தேர்ந்தெடுத்துள்ளனர்.நடிப்பு வாய்ப்பு குறைந்து போவது, பணக்கஷ்டம், குடும்ப பிரச்சனைகள், காதல் தோல்வி போன்ற காரணங்களால் தான் இந்த முடிவுகளை எடுக்கின்றனர். பிரச்சனை வந்தால் அதை எதிர்கொள்ளும் மனநல ஆலோசனைகளை இவர்களுக்கு தர வேண்டியது நடிகர் சங்கங்களின் முக்கிய கடமையாகும்.இதுகுறித்து நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ் கூறுகையில், நடிகர்-நடிகைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எப்போதும் தயாராக இருக்கிறது. பிரச்சினைகளை போனில் சொன்னால் கூட போதும், உதவ தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad