Type Here to Get Search Results !

அஸ்வினை பாராட்டும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்



அஸ்வினின் பந்துவீச்சை காணவே இந்திய ஆட்டங்களை பார்ப்பதாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான சக்லைன் முஷ்டாக் இந்தியாவின் அஸ்வின் பந்துவீச்சை வெகுவாக பாராட்டியுள்ளார்.  அஸ்வின் பந்துவீச்சை காணவே இந்திய ஆட்டங்களை தொடர்ந்து பார்த்து வருவதாகவும் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.  1980களின் இறுதியிலும் 90களின் துவக்கத்திலும் சுழற்பந்துவீச்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சக்லைன் முஷ்டாக்.  இவரது தூஸ்ரா பந்துவீச்சை எளிதில் கற்றுக்கொண்டு அதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அஸ்வின்.  தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் சாம்பியன் லீக் ஆட்டங்களில் பங்கேற்றுவரும் சக்லைன், தமக்கு 30 வயதை நெருங்கும் முன்னரே ஓய்வு பெற்றுள்ளார்.  உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர் என தெரிவித்துள்ள சக்லைன், இந்தியாவின் பல்வேறு வெற்றிகளில் அஸ்வின் பங்கு முக்கியமானது என்றார்.  இந்தியாவின் ஆட்டங்களை தாம் தொடர்ந்து பார்த்து ரசிப்பதற்கு அஸ்வின் பந்துவீச்சே காரணம் எனவும் சக்லைன் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad