Type Here to Get Search Results !

இறுதிச்சுற்று விமர்சனம்



இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தேர்வு கழகத்தின் குளறுபடிகள், ஈகோ மோதல்கள் மற்றும் குஜால் சங்கதிளை குத்திக் காட்டி ,சுட்டிக் காட்டி  மாதவன் தமிழ் , இந்தி இருமொழிகளிலும்  மாறுபட்ட கோணத்தில் நடிக்க ,பெண் இயக்குனர் சுதா கொங்கராவின் எழுத்து , இயக்கத்தில் துணிச்சலாக வெளிவந்திருக்கும்.படமே  இறுதிச் சுற்று. ஒய் நாட்ஸ்டுடியோஸ் ,  திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இரு தயாரிப்பு நிறுவனங்களுடன் யுடிவிமோசன்பிக்சர்ஸும்  இணைந்து தயாரித்திருக்கும் இறுதிச் சுற்று படத்த்தில் இந்திய குத்துச்சண்டையில் குறிப்பாக பெண்களுக்கான இந்திய குத்துச்சண்டை தேர்வில் நடக்கும் திருட்டு தனகளை மிரட்டலாக புட்டு புட்டு வைத்திருப்பதோடு., அதையெல்லாம் தாண்டி பாக்சிங்கில் நம் வீராங்கனைகளின் உலகளவு சாதனைகளையும்  சொல்லி ரசிகனை சீட்டோடு கட்டி போட்டுவிடுகிறது இப்படம் என்றால் மிகையல்ல! படுபயங்கரகோபக்கார பாக்ஸிங் கோச்சரான மாதவன் , சில வருடங்களுக்கு முன் இந்திய அளவில்நடந்த பாக்ஸிங்  போட்டியில்., தன் கோப குணத்தால் நடந்த உள்குத்துபாலிடிக்ஸில் தோல்வியை தழுவி இருக்கிறார் அதனால் ,தன் மனைவியையும் , பாக்சிங் வீரருக்கான தகுதியையும்  இழந்த மேடி , பாக்சிங் கோச் ஆகிறார் .  பெண்களுக்கான குத்துச்சண்டை கோச்சராக ஹரியானாவில் திறம்பட செயல்படும் அவரை , தன்னுடனான பழைய பகையால் சென்னைக்கு தூக்கியடிக்கிறார் மோடியின் ஹை அபிஷியலான தேவ் எனும் ஷாகிர்.அதனால் ,சென்னை பாக்சிங் பயிற்சி மையத்திற்கு பொறுப்பிற்கு வரும் மேடி ., சென்னைமீனவ குப்பத்தில் பல்வித பாக்சிங் திறமைகளுடன்  திரியும் ரித்திகா சிங்கை கண்டுபிடித்து இந்திய வீராங்கனையாக , இண்டர்நேஷனல் லெவலுக்கு  கொண்டு சென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தருவதும் , அவர் மூலம் இழந்த வாழ்க்கையை பெருவதும் , அதற்காக படும் துயரும் , சந்திக்கும் இன்னல்களும் தான் இறுதிச்சுற்று படத்தின் மொத்த கதையும்! பக்காவான பாக்சிங் கோச்சாக மேடி , செம க அப்ளாஸ் அள்ளூ கிறார் .அவர் டென்சன் ஆகும் சீன்களிலும் சரி , பாக்சிங் பயிற்சி கொடுக்கும் சீன் களிலும் சரி தியேட்டரில் விசில் சப்தமும் க்ளாப்ஸூம் தூள் பறக்கிறது! பாக்சிங்கில் ஜெயிக்க வேண்டிய தான் ,உள்குத்து விவகாரங்களால் தோற்றதால் ., மனைவி , வேறு ஒரு பாக்ஸருடன் ஓடிப்போன வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உடன் படுத்து உல்லாசம் தரும் பெண்களில் தொடங்கி, பாக்சிங் தேர்வு கழகத் தலைவர -தேவ் வரை தன்னை கிண்டல் அடிப்பது குறித்து கவலைப்படாமல் .,குத்துசண்டையில் இந்தியாவே மெச்சும் ஒரு வீராங்கனையை உருவாக்குவதில் மேடி காட்டும் முனைப்பு ரசிக்க வைக்கும் ஹாஸ்யம். பீர் குடித்தபடி விசாரணை கமிஷன் வந்து அமர்ந்து கொண்டு நான் ,பீர் குடிக்கும் நேரத்தில் நீங்க கமிட்டி மீட்டிங் யாரைக் கேட்டு வச்சீங்க .? என சின்ன சின்ன விஷயங்களுக்காக கோபபடுவதில் தொடங்கி ., இந்தியாவுக்காக ஒரு சிறந்த வீராங்கனையை தன் பொருளாதாரத்தில் , தன் பொறுப்பில்உருவாக்குவது வரை ... சபாஷ் சொல்லும் அளவிற்கு நச் என்று மேஜிக்காக அதே நேரம் லாஜிக்குடன்நடித்து டச் செய்துவிடுகிறார் மேடி. மனிதர் பலே கில்லாடி தான்! சென்னை கடற்கரையோர மீனவ குப்பத்து அடாவடிப் பெண்ணாக, அலட்டிக் கொள்ளாத பாக்சிங் வீராங்கனை மதியாக ரித்திகா சிங் சான்ஸே இல்லாத சாய்ஸ்! நிஜமான குத்துசண்டை வீராங்கனை என்பதாலோ என்னவோ ., ரித்திகா , பாக்சிங் சம்பந்தப்பட்ட இக்கதையில் பக்காவாக பொளந்துகட்டியிருக்கிறார். பலே, பலே! பாக்சிங்  ரிங்கிற்குள்  மட்டுமின்றி,கிழம் , கிழம் ... என்றபடி மாதவனிடம் மயக்கம் , கிற்ககம் கொள்வதில் கூட  புதுசாக தெரிகிறார் ரித்திகா என்பது இறுதிச்சுற்றின் பெரிய ப்ளஸ்! லக்ஸாக ரித்திகாவின் அக்காவாக வரும் மும்தாஜ் சர்க்கார் , மாதவனின் ஓடிப்போன பொண்டாட்டியின் அப்பாவாக வரும் ராதாரவி விஷம வில்லன் தேர்வு கமிட்டி தேவ் வாக வரும் - ஜாகிர் உசேன் , பல்லீந்தர் கவுர் சர்மா , பிபின்  உள் ளிட்டவர்களில் நாயகி ரித்திகாவின் குடிகார குப்பத்து மதம் மாறி அப்பா காளி வெங்கட் , சார் ,நாங்க கக்கூஸ் கழுவத் தான் லாயக்கு  ... ஆனா கப் பு உங்க வாயிலிருந்துல்ல வருது ...   எனும் குழந்தை தனமான ஜூனியர் கோச் நாசர் உள்ளிட்டவர்கள் நாயகன் , நாயகிக்கு சமமாக ஜொலிக்கின்றனர். அருண் மாத்தீஸ்வரனின் அர்த்தபுஷ்டி வசனங்கள் , சதீஷ் சூர்யாவின் நச்சென்ற படத்தொகுப்பு ,சிவக்குமார் விஜயனின்  காட்சிக்கு காட்சி  துடைத்து வைத்த பளிச் ஒளிப்பதிவு , சந்தோஷ் நாராயணனின் ஏய் சண்டக்காரா ...  வாயாடி மீன்காரி .. ஐந்து நூறு தாளு பார்த்தா .... ஆகிய மெலடி பாடல்கள் ,  புது பாணியில் மிரட்டும் பின்னணி இசை.... உள்ளிட்ட சிறப்பம்சங்கள்  இயக்குனர் சுதா கொங்கராவின் எழுத்து , இயக்கத்திற்கு மேலும், மேலும் ... வலு சேர்த்திருக்கின்றன. ஹெவிவெயிட் , லோ வெயிட் , நாக் அவுட் பன்ச் உள்ளிட்ட பாக்ஸிங் வார்த்தைகளும் அதன் அர்த்தங் களும் எல்லா தரப்புக்கும்  புரியும்படி படம் பண்ணியிருக்கும் இயக்குனர்., பாக்ஸிங் செலக் ஷன் கமிட்டியினரின் பாலிடிக்ஸையும்  சகலரும் உணரும் வகையில் படமாக்கியிருப்பதில் வெகுவாக ஜெயித்திருக்கிறார். ஒரு பெண் இயக்குனரால் புதிய களத்தில் .,இப்படியும் சவாலான, சபாஷ் சொல்லும்படியான படம் எடுக்க முடியும் .. என சீன் பை சீன் மெய்ப்பித்திருக்கும் சுதா கொங்கரா., துணிச்சலாக நாயகியின் அப்பாவாக வரும் காளி வெங்கட் பாத்திரத்தின் வாயிலாக பணத்திற்காக மதம் மாறுபவர்களையும் , அப்படி  மாற்றுபவர்களையும் ஆங்காங்கே அழகாக சாடியிருப்பதில் சகலத்திலும் தான் ஒரு சமூக பிரக்ஞை மிக்க இயக்குனர் என காட்டிக் கொண்டிருப்பது, வரவேற்கத்தக்கது. உங்கள் முயற்சிக்கு , புரட்சிக்கு ... வாழ்த்துக்கள்  சுதாகொங்கரா மொத்தத்தில் ,ஸ்போர்ட்ஸ் சப்ஜெக்டையும் போரடிக்காது  சொன்ன இறுதிச் சுற்று - இமாலய வெற்றிச்சுற்று! தமிழ் சினிமாவுக்கு புது இலக்கணம் வடித்துள்ள இறுதிச் சுற்று


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad