Type Here to Get Search Results !

பாண்டிராஜின் முதல் முயற்சி



நடிகர் சங்க வெற்றி தொடர்ந்து படங்கள் என உற்சாகமாக உள்ளார் விஷால். படப்பூஜை போடும் நாளே படத்தின் ரிலிஸ் தேதியை கூறி சொன்னப்படி ரிலிஸும் செய்து அசத்துபவர் விஷால்.இவர் முதன் முறையாக இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து பணியாற்றிய படம் கதகளி. இப்படம் இந்த பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.இதில் இவருக்கு ஜோடியாக மெட்ராஸ் கேத்ரின் நடித்துள்ளார். ஏற்கனவே ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது.இப்படம் குறித்து விஷால் கூறுகையில் ‘இது விஷால் படமும் இல்லை, பாண்டிராஜ் படமும் இல்லை. இப்படம் விஷால்-பாண்டிராஜ் படம் என்று சேர்த்து தான் கூற வேண்டும்.பாண்டிராஜ் முதன் முறையாக ஆக்‌ஷன் களத்தில் இறங்கியுள்ளார். ஆக்‌ஷன் என்றால் 50, 100 பேரை அடிப்பது போல் இருக்காது, அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று வேகமான திரைக்கதையால் கலக்கியுள்ளார்’ என தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் சினிமா ஜல்லிக்கட்டில் கதகளியும் சீற ரெடியாகிவிட்டது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad