Type Here to Get Search Results !

அடுத்த பட வேலைகளில் பாலா

பாலா இயக்கியுள்ள தாரை தப்பட்டை  படம் இன்னும் சில நாட்களில்



வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே பாலா அவருடைய அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தில் அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா,  ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்கள். படத்தின் நாயகிகளில் ஒருவராக அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்ததாக இதற்கு முன்பே செய்தி வெளியியானது . அனுஷ்கா தற்போது பாகுபலி 2, எஸ் 3 ஆகிய படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் இந்தப் படத்தில் நடித்தால் அது தனக்குப் பெரிய பெயரைத் தரும் என்ற நம்பிக்கையில் அவரும் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.அத்துடன் மற்ற ஹீரோயின்களைத் தேடும் படலத்தையும் பாலா ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். குற்றப் பரம்பரை கதையைத்தான் பாலா இந்தப் படத்திற்காக படமாக்கப் போகிறார் என்ற தகவலும் உண்டு. ஆனால், அது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இயக்குனர் பாராதிராஜா, நீண்ட நாட்களாகவே அந்தக் கதையைப் படமாக்க முயற்சித்து வருகிறார், ஆனால், அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை.;தாரை தப்பட்டை; படத்திற்கு இசையமைத்த இளையராஜாதான் பாலாவின் புதிய படத்திற்கும் இசையமைக்கப் போகிறாரா அல்லது வேறு யாரையாவது இசையமைக்க வைக்கப் போகிறாரா என்பது போன்ற பல சந்தேகங்களுக்குப் பொங்கலுக்குப் பிறகுதான் விடை கிடைக்கும்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad