Type Here to Get Search Results !

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் நர்ஸ் அக்கா



சில வருடங்களுக்கு முன்புவரை ஒரு படம் தொடங்குவதற்கு முன்னரே அப்படத்துக்கு தலைப்பு வைத்துவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் படத்துக்கு பூஜை போடுவதற்கு முன் கதைவிவாதம் நடக்கும்போதே படத்தின் தலைப்பு இறுதி செய்யப்பட்டுவிடும். இப்போது இந்த வழக்கம் குறைந்து வருகிறது. படத்துக்கு பூஜைபோடும்போது மட்டுமல்ல, படத்தின் ரிலீஸுக்கு சில வாரங்கள் முன்புதான் படத்தின் தலைப்பையே அறிவிக்கிறார்கள். தலைப்பு பற்றிய சஸ்பென்ஸை மெயின்டெயின் பண்ணினால் அது படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.  அப்படி நினைப்பவர்களின் சிவகார்த்திகேயனும் ஒருவர். தற்போது அவர் நடித்து வரும் நர்ஸ் அக்கா படத்தின் பெயரை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமலே சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அப்படத்தில் பணியாற்றுகிறவர்களின் மூலம் படத்தின் பெயர் நர்ஸ் அக்கா என்பது வெளியே கசிந்துவிட்டது.இந்நிலையில்  பிப்ரவரி 17 அன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் வருகிறது. அன்றைக்கு நர்ஸ் அக்கா என்ற பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வகையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட உள்ளனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad