Type Here to Get Search Results !

தோனியை ஆதரிக்கும் சங்கக்காரா



தோனியின் அணித்தலைவர் பதவி பற்றி பிறர் கருத்து கூறுவது சரியானது அல்ல என்று இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சங்கக்காரா கூறியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா தற்போது மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.  அவர் இந்திய அணித்தலைவர் தோனி பற்றி கூறுகையில், "டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவது ஒரு கலை. டெஸ்ட் ஆடும் வீரர்களில் அதிகம் பேர் டி20 போட்டிகளில் ஆடுவது பொருத்தமாகாது.  இந்த நிலையில் கிரிக்கெட்டை ஒரு மதம் போல பாவிக்கும் நாட்டில் அந்த அணியின் தலைவராக பணியாற்றுவது எவ்வளவு சிரமமானது என்பதை தோனி நன்கு அறிந்திருப்பார்.  3 ஒருநாள் தொடர்களை தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக இழந்திருக்கலாம். ஆனால் அவரது தலைவர் பதவி பற்றி பிறர் கருத்து கூறுவது சரியல்ல.  தலைவர் பதவியில் தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்பது தோனிக்கு மட்டுமே நன்கு தெரியும். இது அவருக்கும் தெரிவாளர்களுக்கும் இடையே மட்டுமே நடைபெற வேண்டிய உரையாடல்.  அதேவேளை கோஹ்லி அநேகமாக அணியின் தலைவர் பொறுப்புக்கு தயாராகி விட்டதாகவே தெரிகிறது" என்று கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad