Type Here to Get Search Results !

ஜாம்பவான்கள் விளையாடும் மாஸ்டர் சாம்பியன்ஸ்




ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடும் மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஜெமினி அரேபியன்ஸ், லிப்ரா லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று ஆரம்பித்த இந்த போட்டியில், ஷேவாக் தலைமையிலான ஜெமினி அரேபியன்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில், காலிஸ் தலைமையிலான லிப்ரா லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.  234 ரன்கள் குவித்த அரேபியன்ஸ் அணி சார்பாக சங்கக்காரா 86 ரன்களும், ரிச்சர்ட் லெவி 62 ரன்களும் எடுத்தனர்.  அணித்தலைவர் ஷேவாக் 21 ரன்கள் எடுத்தார், லிப்ரா அணி 156 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.  லிப்ரா அணி சார்பில் அதிகபட்சமாக ரியான் 53 ரன்கள், டிம் அம்ப்ரோஸ் 30 ரன்கள் எடுத்தனர்.  அரேபியன் அணியின் சார்பாக விளையாடிய சங்கக்காரா ஆரம்ப ஆட்டத்திலேயே அதிரடி காட்டியுள்ளார்.

ஜெமினி அரேபியன்ஸ்

சேவாக் (கேப்டன்), ரூடால்ப், ரிச்சர்ட் லிவி, சங்கக்காரா, பிராட் ஹாட்ஜ், சந்திரபால், ஜாஸ்டின் கெம்ப், சக்லைன் முஷ்டாக், நவேத் உல் ஹசன், முத்தையா முரளிதரன், கைல் மில்ஸ், பால் ஹாரிஸ், சகிப் அலி, கிரகாம் ஆணியன்ஸ், ஆஷிஷ் பகாய்.

லிப்ரா லெஜெண்ட்ஸ்

காலிஸ் (கேப்டன்), மைக்கேல் லம்ப், தொபீக் உமர், டென் டஷே, மார்க்ஸ் நார்த், கிறிஸ் ரீட், கிரேம் ஸ்வான், சைடு பாட்டம், பிராட் ஹாக், நிக்கி போஜே, அயன் பட்லர், அஜய் ராத்ரா.

மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் ஜனவரி 28ம் தேதி  முதல் பிப்ரவரி 13ம் தேதி  வரை களைகட்டவுள்ளது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad