Type Here to Get Search Results !

விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால்



ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த ‘சிங்கம்புலி’ படத்தை தயாரித்த நிறுவனம், எஸ்.எஸ்.எப். இந்த பட நிறுவனம் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது. இதில், விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.  திரு டைரக்டு செய்கிறார். இவர், ‘நான் சிகப்பு மனிதன்,’ ‘சமர்,’ ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். மற்ற நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகவில்லை.  விக்ரம், திரு டைரக்ஷனில் நடிப்பது போல் ‘அரிமாநம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் டைரக்ஷனிலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஒரே நேரத்தில் அவர் 2 படங்களிலும் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad