Type Here to Get Search Results !

'கணிதன்' படத்துக்கு எதிர்பார்ப்பு




'ஈட்டி' படத்துக்கு கிடைத்துள்ள வெற்றி அந்த படத்தின் கதாநாயகன் அதர்வா, டைரக்டர் ரவிஅரசு ஆகிய இருவரையும் திரும்பிப்பார்க்க வைத்து இருக்கிறது. ரூ.5 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், திரைக்கு வந்த நான்காவது நாளிலேயே ரூ.6 கோடியை தாண்டி வசூல் செய்து விட்டது.  இதைத்தொடர்ந்து அதர்வா நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் 'கணிதன்' படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இதில், அதர்வா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்து வருகிறார். கே.பாக்யராஜ், சத்யராஜ், கருணாகரன், மனோபாலா, ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் டைரக்டு செய்ய, எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இது, விஞ்ஞானப்பூர்வமான கதையம்சம் கொண்ட படம். படத்தை விரைவில் முடித்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad