Type Here to Get Search Results !

திரு - விக்ரம் இணையும் 'கருடா'





இயக்குநர் திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்துக்கு 'கருடா' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.  ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட இருக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பணியாற்ற இருக்கிறார்கள். ஷிபு தமீன்ஸ் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 10ம் தேதி தொடங்க இருக்கிறது.  இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் திரு இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம். எஸ்.எஸ்.எஃப் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.  ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விக்ரம். திரு இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்துக்கு 'கருடா' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். ஆனந்த் ஷங்கரின் படத்தின் மலேசிய படப்பிடிப்பு முடிந்தவுடன், திரு படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.  திரு கதைக்கு 'கருடா' என்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் இடம் பேசியிருக்கிறார் விக்ரம். அதனைத் தொடர்ந்து 'புலி' படத்துக்காக பதிவு செய்து வைத்திருந்த 'கருடா' தலைப்பைக் கொடுத்திருக்கிறார் ஷிபு தமீன்ஸ்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad