Type Here to Get Search Results !

2016ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறும் 5 வீரர்கள்

நடப்பு ஆண்டில் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, ஷேவாக், கிளார்க் என பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெற்றனர்.
இந்த நிலையில் அடுத்த வருடம் தோனி , டில்ஷான், டிவில்லியர்ஸ், நெஹ்ரா, ஸ்டெய்ன் இவர்களும் ஓய்வு பெறுவார்கள் என்று தெரிகிறது

தோனி :-

                         



இந்திய அணித்தலைவர் தோனி , இந்தியாவின் சாதனை தலைவராக உள்ளார். இதுவரை 2 உலகக்கோப்பைகளை வென்று கொடுத்துள்ள தோனி , அடுத்த வருடம் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையை  குறிவைத்துள்ளார்.  இவர் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென்று ஓய்வு பெற்றார். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு  பிறகு ஒருநாள் போட்டியில் இருந்தும் விடைபெறுவார் என்று தெரிகிறது.

டில்ஷான்:-

                       



ஜெயசூரியாவின் ஓய்வுக்கு பிறகு இலங்கை அணியில் அதிரடி தொடக்கத்தை தொடர்ந்து வருகிறார் டில்ஷான். அவருக்கு தற்போது 39 வயதாகிறது. இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கும் டில்ஷான் அடுத்த வருடம் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

டிவில்லியர்ஸ்:-

                           



தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ், அணிக்காக சிறப்பாக பங்காற்றி வருகிறார். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று துறைகளிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.  மூன்று துறைகளிலும் விளையாடி வருவதால் பணிசுமையை குறைக்க நடவடிக்கை எடுப்பார்.  முதுகுவலியாலும் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக ஏதாவது ஒரு துறையில் இருந்து ஓய்வு பெறலாம்.

ஆஷிஷ் நெஹ்ரா:-

                           



இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ராவுக்கு தற்போது 36 வயது ஆகிறது.  இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில், உள்ளூர் போட்டிகளிலும் அதிகமாக இடம்பெறவில்லை.  இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டி இவருக்கு கடைசி போட்டியாக அமையலாம்.

டேல் ஸ்டெய்ன்:-

                       



தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னும் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறுவார் என்று தெரிகிறது.  டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இவர் தொடர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் இவரும் டி20 உலகக்கோப்பையோடு  விடைபெறலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad