Type Here to Get Search Results !

விஜய் - அஜித் படங்களுக்கு தலைப்பு பஞ்சமா? நடப்பது மவுன யுத்தமா?




விஜய்யும், அஜித்தும் ஒருவரை ஒருவர் சந்தித்து கட்டித் தழுவிக்கொள்வதும், ஒருவர் வீட்டுக்கு ஒருவர் குடும்பத்துடன் விருந்துக்கு செல்வதும், அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது வேற இது வேற என்கிற மாதிரி இருக்கிறது. அவர்களது ரசிகர்களின் மோதல். தியேட்டர் வாசலில் பேனர் கட்டும்போது மோதிக் கொண்டவர்கள் இப்போது பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் மிக மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். விஜய் படத்தை அஜித் ரசிகர்களும், அஜித் படத்தை விஜய் ரசிகர்களும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். வேறு எந்த மொழியிலும் இல்லாத மோசமான இந்த நிலை தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள்கூட இப்படி மோதிக் கொண்டதில்லை. ரஜினி, கமல் ரசிகர்கள் கூட இப்படி மோதிக் கொண்டதில்லை. இவர்களின் மோதல்தான் மிக மோசமாக இருக்கிறது. இந்த மோதல்தான் இருவர் படத்துக்கான ஓப்பனிங்கையும், வசூலையும், நல்ல விளம்பரத்தையும் தருவாக தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் நம்புகிறார்கள். இதனால் அஜித்துக்கும், விஜய்க்கும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு வியாபார யுக்தியாக இந்த மோதலை வளர்த்தெடுக்கிறார்கள். தமிழ் நாட்டின் பிற ஏரியாக்களில் விநியோகஸ்தர்களே ரசிகர்களின் பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டி படத்தின் வசூல் டெம்போவை ஏற்றுவதாககூட சொல்வார்கள். சமீபகாலமாக நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும்போது இது சம்பந்தப்பட்ட இரு நட்சத்திரங்களுக்கும் தெரிந்தே தான் நடக்கிறதோ என்ற எண்ண வைக்கிறது. புலி படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அதில் வேதாளம் என்கிற முக்கிய விஷயம் கையாளப்படுவது மீடியாக்களுக்கும், ரசிகனுக்கும் வேண்டுமானால் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இரண்டு பட யூனிட்டாருக்கும், குறிப்பாக இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோவுக்கு தெரிந்திருக்கும். தெரிந்தே அஜித் படத்திற்கு வேதாளம் என்று பெயர் வைத்தார்கள் வேதாளம் படத்தின் முதல் டீசரே தெறிக்கவிடலாமா என்ற டயலாக்கோடுதான் தொடங்கியது. அன்று முதல் தெறி என்கிற வார்த்தை பிரபலமானது. இப்போது விஜய் நடிக்கும் படத்திற்கு தெறி என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். 6 லட்சம் வார்த்தைகள்  தமிழில் இருக்கும்போது ஒருவர் தொடர்புடைய வார்த்தையை மற்றொருவர் தலைப்பாக வைப்பது ரசிகர்களிடையே எப்போதும் ஒரு பிரிவினையை திட்டமிட்டு வளர்க்கவே செய்யப்படுவதாக தோன்றுகிறது.இது உண்மையில்லை என்றால் அஜித்தும், விஜய்யும் இதுகுறித்து கூட்டாக கருத்து தெரிவிக்க வேண்டும். தங்கள் ரசிகர்கள் இணைய தளங்களில் மிக மோசமாக மோதிக்கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த திட்டமிட்டு உருவாக்கப்படும் இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad