Type Here to Get Search Results !

'சுழல் தமிழன்' அஸ்வினின் ஐம்பெரும் சாதனைகள்





தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்டில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என தன்வசமாக்கியது.  வெளிநாட்டு தொடர்களை கடந்த 9 ஆண்டுகளாக இழக்காமல் இருந்த வந்த தென் ஆப்பிரிக்க அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆட்ட நாயகனாக 12 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் தேர்வானார்.  2006-க்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 15 தொடர்களை வென்றது. தற்போது முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு அஸ்வினின் பந்துவீச்சு முதன்மைக் காரணம். இத்துடன் அஸ்வின் புரிந்துள்ள ஐம்பெரும் சாதனைகள்:  * நாக்பூர் டெஸ்டில் அஸ்வின் 66 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்தினார். இது அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன்னர் ஆஸி.க்கு எதிராக 103 ரன்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.  * அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 15-வது முறையாகும். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட்டின் சாதனையை சமன் செய்தார். அவர் 31 டெஸ்டில் 15 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  * அஸ்வின் 31 டெஸ்டில் 169 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சாளர்களில் 31 டெஸ்டில் கிரிம் மெட் 164 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.  * நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டில் மட்டும் 8 டெஸ்டில் விளையாடி 55 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  * அஸ்வின் இந்த ஆண்டில் 55 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஒரே ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட விக்கெட் வீழ்த்தும் 12-வது இந்திய வீரர் இவர் ஆவார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad