Type Here to Get Search Results !

நாக்பூர் ஆடுகளம் எப்படி? வீரர்களின் அதிரடி விமர்சனங்கள்









நாக்பூர் ஆடுகளம் பற்றி முன்னணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நாக்பூர் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகள் விழுந்துள்ளது. கடைசியாக 310 ரன்கள்  என்ற ‘இமாலய’ இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள்  எடுத்துள்ளது.  ஆடுகள பிட்ச் குறித்து வீரர்களின் கருத்துக்கள் இதோ,

மைக்கேல் வான்:

       இது மிகவும் கொடூரமான பிட்ச். இது 5 நாட்கள் போட்டி நீடிக்க தயாரிக்கப்பட்டது என்று கூறமுடியுமா?

 கிளென் மேக்ஸ்வெல்:

     இந்தப் பிட்ச் கொடூரமானது; முதல் ஒரு மணி நேரத்தில் 9 விக்கெட்டுகள் விழும் வாய்ப்பு, ஏனெனில் ஒவ்வொரு ஓவரிலும் 3 பந்துகள் பேட்ஸ்மென் விக்கெட்டை அச்சுறுத்துகிறது.

 மேத்யூ ஹெய்டன்:

      டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் நாம் இப்போது பார்க்கும் அளவுக்கு சீரழிந்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

வாசிம் அக்ரம்:

        உலகம் முழுதும் டெஸ்ட் பிட்ச்களைத் தயாரிப்பதில் ஐசிசி முனைப்பு காட்டுவது அவசியம். அல்லது அணியின் தரநிலையை பாதிக்கும் வண்ணம் புள்ளிகளைக் குறைக்க வேண்டும். அதுவரை இப்படிப்பட்ட பிட்ச்களை நாம் பார்த்துத்தான் தீர வேண்டும்.

ராபின் பீட்டர்சன்:

      ஏன் டெஸ்ட் கிரிக்கெட் என்று அழைக்கப்படுகிறது என்றால் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அனைத்து துறைகளிலும் வீரர்களின் திறமையை சோதிப்பதால்தான். இப்போது அதனை பார்க்க முடிவதில்லை.

 ரோஷான் அபய்சிங்கே:

       நாக்பூர் பிட்ச் போல் தயாரித்தால் 3 நாள் டெஸ்ட் கிரிக்கெட்தான் இனிமேல். இது பார்க்க மிகவும் அவமானகரமாக உள்ளது.

 ராஜ்தீப் சர்தேசாய்:

   தென் ஆப்பிரிக்கா ஸ்பின் பந்து வீச்சை ஆடமுடியாது, ஆனாலும் இது மிகவும் இழிவான பிட்ச். ஜுஹு பீச் போல் உள்ளது.

டிரெண்ட் ஜான்சன்:

      215 ரன்களை எடுத்த பிறகு இந்தியா 136 ரன்கள் முன்னிலை!! ஆட்ட நடுவர்களின் அறிக்கையை படிக்க ஆசையாக இருக்கிறது.

ரிச்சர்ட் ஹைண்ட்ஸ்:

     தென் ஆப்பிரிக்கா 79 ஆல் அவுட். 80 ரன்களுக்கும் அதிகமாக அடிக்க முடியக்கூடிய பிட்சில் தென் ஆப்பிரிக்கா மோசமான ஆட்டம்.

 டாம் மூடி:

     இந்த நாக்பூர் பிட்ச் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு லாயக்கற்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad