நான் இன்று பவுலராக இந்திய அணியில் இருக்க காரணம் யார் தெரியுமா? இஷாந்த் சர்மா உருக்கம்







என்னை முழு பந்துவீச்சாளராக மாற்றிய பெருமை ஜாகீர் கானுக்கு தான் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா உருக்கமாக கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  இந்நிலையில் அவர் தான் எனது கிரிக்கெட் வாழ்வில் பல விடயங்களை கற்றுக் கொடுத்தவர், அவர் செய்த உதவிகளை என்றும் மறக்க மாட்டேன் என்று இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஜாகீர் கானின் அறிவுரை தான் தற்போது என்னை முழு பந்து வீச்சாளராக மாற்றி உள்ளது. அந்த அளவு அவர் எனக்கு உதவி செய்துள்ளார்.  அவருக்கு நான் அதிகமாக கடமைப்பட்டுள்ளேன். ஆரம்ப கால கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்து பார்கிறேன்.  அவர் கற்றுக் கொடுத்த பாடங்கள் தான் என்னை இன்று இந்திய அணியில் ஒரு பந்துவீச்சாளராக இருக்க செய்துள்ளது. அவர் எனது ரோல் மொடல். அதையும் தாண்டி எனக்கு அவர் மிகச்சிறந்த நண்பர்” என்று தெரிவித்துள்ளார்.





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url