கீர்த்திசுரேஷ் மறுபடியும் சிவகார்த்திகேயன் ஜோடியானது எப்படி?







சிவகார்த்திகேயன் அடுத்து புதுஇயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்துக்கு பல நாட்களாக நாயகி தேடுதல் நடந்துகொண்டிருந்தது. இப்போது சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் படத்தில் நடித்த கீர்த்திசுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.  முந்தையபடத்தில் ஜோடியாக நடித்த நடிகையையே இந்தப்படத்துக்கும் ஒப்பந்தம் செய்தது எதனால்? என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் ராஜா, இயக்குநர் பாக்யராஜ்கண்ணன் ஆகியோருக்கும் இந்தத் தயக்கம் இருந்ததாம்.
ஆனால், படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமானவராக கீர்த்திசுரேஷ் இருப்பார் என்று உறுதியாகச் சொன்னாராம். அவருடைய கருத்தை ஏற்று உடனடியாக கீர்த்திசுரேஷை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
இப்புதிய படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இரண்டாம்தேதி முதல் தொடங்கவிருக்கிறதாம். தற்பொழுது ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url