சச்சினை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ரஜினிகாந்த்!













அக்டோபர் 3ஆம் தேதியன்று இரண்டாவது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் முதலில் நமது பாரம்பரிய நடனமான பரத நாட்டியம் ,கேரளாவின் பாரம்பரிய நடனம்,  இதைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகைகள் அலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.  இதன்பின்னர், நடிகர் ரஜினிகாந்த் கால்பந்திற்கான பந்தை, முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானியிடம் வழங்கினார். தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தன.  விழாவில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும் ரஜினி , சச்சின், ஐஸ்வர்யா ராய், அலியா பட் உள்ளிட்டோர் செல்ஃபி எடுத்துக் கொண்டத் தருணம் அனைவரையும் மகிழ்ச்சியிலும், குதூகலத்திலும் ஆழ்த்தியது.  சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ரஜினிகாந்தின் உற்சாகம் ஐ.எஸ்.எல் துவக்கம் விழா முழவதும் தொற்றிக்கொண்டது. எல்லா அணிக்கும் நன்மைகள் நடக்க வாழ்த்துகள்” என ரஜினியின் எனர்ஜி குறித்து பூரிப்புடன் வெளியிட்டுள்ளார்.   






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url