Type Here to Get Search Results !

இரு கேப்டன் ‘பார்முலா’: இந்திய அணியில் பிளவு






இந்திய அணிக்கு தோனி, கோஹ்லி என இரண்டு கேப்டன்கள் இருப்பது பெரும் தலைவலியாக உள்ளது. இதனால், வீரர்களுக்கு இடையே பிளவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன் பாலிசியை முதன் முதலில் ஆஸ்திரேலியா தான் கொண்டு வந்தது. இதனை இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளும் பின்பற்றின.. தற்போதைய தென் ஆப்ரிக்க அணியை பொறுத்தவரையில் டுபிளசி , டிவிலியர்ஸ் (ஒருநாள்), ஆம்லா (டெஸ்ட்) என, 3 கேப்டன்கள் உள்ளனர். இந்த மூன்று பேரும் மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் விளையாடுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் ஆலோசித்து அணியின் வெற்றிக்கு புதிய திட்டங்களை வகுக்கின்றனர். இது குறித்து டுபிளசி கூறுகையில் அனைத்து கேப்டன்களும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். எங்களுக்குள் ஒரு முறை கூட வேற்றுமை ஏற்பட்டதில்லை. ஒருவரிடம் மற்றொருவர் பாடம் படிக்கிறோம்

குழப்பமான இருவர்


 இந்திய அணியில் இது அப்படியே மாறுபட்டு காணப்படுகிறது. கடந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் விடை பெற்றதால், கேப்டன் பொறுப்பு கோஹ்லியிடம் சென்றது. ஒருநாள்,டுவென்டி அணிக்கு மட்டும் தோனி கேப்டனாக உள்ளார். கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படுகிறார். வீரர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கும் இவர், களத்தில் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டார். இவரிடம் விளையாடி விட்டு வரும் வீரர்கள், தோனி தலைமையில் விளையாடும் போது, அப்படியே  செயல்பட வேண்டியதுள்ளது. இதனால் வீரர்களுக்கு இடையே ஒரு வித குழப்பம் ஏற்பட, பிளவு உண்டாகி விட்டதாக தெரிகிறது. இது அணியின் வெற்றியை அதிகமாகவே பாதிக்கிறது. அதிக தோல்வி உலக கோப்பை தொடருக்குப் பின் தோனி தலைமையில் வங்கதேசம், தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி தான் கிடைத்தது. தவிர, இரு கேப்டன் முறை வந்த பின் பங்கேற்ற 4  போட்டிகளில் 3ல் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டு கேப்டன்கள் இருப்பதால், பவுலிங் கூட்டணியை முடிவு செய்வதிலும் குழப்பம் தான் மிஞ்சுகிறது. அணியின் வெற்றிக்கு வீரர்கள் ஒற்றுமை முக்கியம். தற்போது ஒற்றுமைக்குள் வேற்றுமை வந்து விட்டதால், இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் நமக்கு சரிப்படாது இதுகுறித்து முன்னாள் வீரர் அகார்கர் கூறுகையில் கேப்டன் விஷயத்தில் மற்ற நாடுகளில் உள்ள முறையை நாம் பின்பற்ற விரும்புகிறோம். இது இந்திய அணிக்கு சரிப்பட்டு வராது. இம்முறையால் வீரர்கள் யாருக்கு விசுவாசமாக செயல்படுவது என தடுமாறுகின்றனர். ஒரு கேப்டன், ஒரு உத்தரவு என்றால் வீரர்கள் யாருக்கும் பயமின்றி துணிச்சலாக செயல்படுவர் என்றார் இதனால், தோனியை வீரராக அணியில் தொடர அனுமதித்து விட்டு, ஒருநாள், அணிகளின் கேப்டன் பொறுப்பையும் கோஹ்லியிடமே ஒப்படைத்து விடலாம் என கிரிக்கெட் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad