சச்சின் என்னை தடுத்து விட்டார்! மனம் திறந்த ஷேவாக்










நான் சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 2007ம் ஆண்டே ஓய்வு பெற முடிவு செய்தேன் என்று முன்னாள் இந்திய வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார். இந்திய அதிரடி வீரர் ஷேவாக் 37, டெஸ்ட் போட்டிகளில் இரு முறை முச்சதம் அடித்து சாதனை படைத்தவர். இவர் சமீபத்தில் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.  இது குறித்து பேசிய ஷேவாக், "ஒவ்வொரு வீரர்களும் உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு பெற்றுவிட விரும்புவர். இதன் படி நானும் ஓய்வு பெற்றுவிட முடிவு செய்தேன்.  கடந்த 2007ம் ஆண்டு இந்திய அணியில் இருந்து நான் நீக்கப்பட்ட போது ஓய்வு பெற்றுவிடலாம் என்று எண்ணினேன். ஆனால் அப்போது சச்சின் என்னை தடுத்து விட்டார்.  கடந்த 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான தொடரில் இருந்தும் நீக்கப்பட்டேன். ஆனால் இந்த தகவலை என்னிடம் முன்பே யாரும் தெரிவிக்கவில்லை. தெரிந்திருந்தால் அப்போதே ஓய்வு பெற்றிருப்பேன்.  மேலும், வர்ணனையாளர் பதவுக்கு யாரேனும் அழைத்தால் அது பற்றி பரிசீலனை செய்வேன். எனது துடுப்பாட்டம் போலவே, வர்ணனை பணியையும் நேர்மையாக செய்வேன்" என்று கூறியுள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url